Substations

என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன் ஆமென்..

பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிறவரான புனித அந்தோணியாரே .... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

இரக்கமே உருவான குழந்தை இயேசுவே! உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று வரத்தை அளித்தருளும்படி பணிவாக உம்மை இறைஞ்சி வேண்டுகிறோம்.

சர்வலோகம் படைக்குமுன்னே சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தப்புள்ள கிரிகைகளையும், சிந்தனைகளையும் கண்டிப்பாய் நீக்கி விலக்கின புனித இஞ்ஞாசியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தர்மநெறியில் மாறாத மனதை விரும்பினவரான புனித அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்